பேரிஸ்டவ்,வார்னர் அசத்தல் அதிரடி : பஞ்சாப் அணிக்கு 202 ரன்கள் இலக்கு

பேரிஸ்டவ் 97 ரன்கள், வார்னர் 52 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு 202 ரன்கள் இலக்காக ஹைதராபாத் அணி வழங்கியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.ஹைதராபாத் அணி சார்பில் தொடக்க வீரர்களாக வார்னர்,பேரிஸ்டவ் களம் இறங்கினர்.இருவரும் தொடக்கம் முதலே அடி நொறுக்க,எதிரணி பௌலர்கள் இவர்களின் விக்கெட்களை எடுக்க திணறினர்.

பேரிஸ்டவ் 28 பந்துகளில் 50 ரன்களை கடக்க,ஹைதராபாத் அணி 10 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்தது.மேக்ஸ்வல் வீசிய 11 வது ஓவரில் பேரிஸ்டவ் ஒரு பௌண்டரி,2 சிக்ஸர்கள் பறக்கவிட,கேப்டன் டேவிட் வார்னர் 37 பந்துகளில் 50 ரன்களை தொட்டார்.ஹைதராபாத் அணி 15 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்து இருந்தது.ரவி பிஸ்னோய் வீசிய 15.1 ஓவர் முதல் பந்தே வார்னர்(52 ரன்கள்,40 பந்துகள்) தூக்கி அடிக்க பார்த்து மேக்ஸ்வல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பேரிஸ்டவ்(97 ரன்கள்,55 பந்துகள்) அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார்.அடுத்து அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் 1 ரன் மட்டுமே அடித்து மனிஷ் பாண்டே அவரிடமே கேட்ச் கொடுக்க,17 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் அணி எடுத்து இருந்தது.ரவி பிஸ்னோய் வீசிய அடுத்த ஓவரில் சமத் 8 ரன்களோடு வெளியேற,அடுத்த வந்த பிரியம் கார்க் டக் அவுட் ஆகி நடையை கட்டினார்.

புதியதாக உள்ளே வந்த அபிசேக் சர்மா அர்ஷ்தீப் பந்தில் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் விரட்ட,கடைசி ஓவர் வீசிய சமி பந்தில் வில்லியம்சன் தன் பங்கிற்கு ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடிக்க,மறுமுனையில் அபிசேக் சர்மா 12 ரன்களில் வெளியேறினார்.20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் அடித்து,பஞ்சாப் அணிக்கு 202 ரன்கள் இலக்காக வழங்கியது.

ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக பேரிஸ்டவ் 97 ரன்களும், வார்னர் 52 ரன்கள் எடுத்து இருந்தனர்.

பஞ்சாப் அணியில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.

Exit mobile version