ஐ.பி.எல் ஆட்டத்தில் இது கேம் நம்பர் 3… இனிமே மாறப்போகுது எங்க ஆட்டத்தோட சீன்..

முதலில் டாஸ் வின் பண்ண SRH பால் எடுக்க..பெங்களூருக்கு பேட் கொடுக்க.. வேற லெவல் பேட்டிங் ஓட களம் இறங்கினார்கள் பட்டிகல்,ஆரோன் பின்ச்.. என் உடம்பில ஓடுற இளம் ரத்தம் கொதிக்க… அதனால கிடைச்ச பந்தலாம் தூக்கி தூக்கி அடிக்க.. ஒரு படிக்கல் பட்டய கிளப்ப.. ஏன் வந்தோம்னு தெரியாம எதுக்கு தட்டி கொடுக்குறோம்னு புரியாம பின்ச் அவர் பாட்டுக்கு கட்டைய போட.. பெங்களூர் ரசிகர்கள் ஸ்கோர் அடிப்பா பின்ச் குரல் கொடுக்க…அட போங்கப்பா எனக்கு ஆடவும் வரல அடிக்கவும் வரல நான் போறேன் அபிசேக்போட்ட அடிக்க வேண்டிய பந்த கால்ல கொடுத்து l b w ஆகி வெளிய போய்ட்டாரு பின்ச்.. நான்கு திசையையும் நாக் அவுட் பண்ண படிக்கல் நாக்கு தள்ளி 50 அடிச்சு அக்கடான்னு போக அணி எண்ணிக்கை 90..அத அடிச்சு கொண்டு போவேன்னு 200.. கோலியும் டிவில்லியர்ஸும் கிரௌண்ட்ல குதிக்க.. எல்லா மேட்சும் என்னால அடிக்க முடியாது பெங்களூரு டீம்க்கு நான் எட்டு பட்டி ராசா.. எப்படி அவுட் ஆகிட்டு போறேன் பாரு மாஸ் ஆஹ் னு கோலியும் கிளம்ப…ஒரு முனையில் எட்டு அடி தூரத்தில் எட்டி எட்டி அடிச்சாரு டிவில்லியர்ஸ்… எங்கையோ இருந்த ரன் ஆஹ் தூக்கிகிட்டு கன் மாதிரி நிறுத்துனாரு..ஐயோ பாவம்னு ஓடிட்டு இருந்த டிவில்லியர்ஸும் ஓரமாய் போய் நின்னுக்கிட்டாரு.. கடைசில 20 ஓவர்க்கு பெங்களூர் 163..
இதல்லாம் ஒரு ஸ்கோர் ஆஹ் எப்படி தூக்கி அடிக்குறேன் பார்ராஹ்னு ஹைதரபாத் கிப் டாப் ஆஹ் வர..முதல் பந்து முட்டி போட்டு போர் அடிச்ச வார்னர்.. இனிமே நீங்க தான் என் கார்னர்னு..தூரமாய் நின்ன உமேஷ் கைல பந்து பட்டு ஸ்டம்ப் தெறிக்க..டேவிட் வார்னர் சம்மந்தமே இல்லாம கம்பி நீட்ட….பேரிஸ்டோவ் மரண காட்டு காட்ட.. பேரிஸ்டோவ் வேகம் பெங்களூர்க்கு அணிக்கு மிக பெரிய சோகம்.. கூட இருந்த பாண்டே வந்தாரு பார்ம்.. மொத்த ஆடியன்ஸ் ஆனாங்க காம்.. அவர் கிடைச்ச பால் தூக்கி அடிக்க.. அவர் கேட்ச்யையும் சைனி தொறத்தி பிடிக்க .. அடுத்து வந்த கார்க்கு கொடுத்தாரு ஷாக்கு… யார் எப்படி போன எனக்கு என்ன நான் அடிப்பேன் அம்பது.. பெங்களூர் ஸ்கோர் இப்ப 100 தாண்டி எம்புது.. போதும் டா சாமி என்ன எடுத்தாங்க 8 கோடி,,அதனால நட்டேன் கிரௌண்ட்ல கொடினு பேரிஸ்டோவ் வெளிய போக.. நான் பார்க்க தான் குட்டி ஆனா பால் போடுவேன் நல்லா சுத்தினு சகால் விஜய் சங்கரையும் அவுட் ஆக ..தூரமா போகும் காத்தே எதிர்ல ஓடி வரேன் பார்த்தேன்னு ரஷித் ரன் எடுக்க ஓட,அபிசேக் மேல வந்து மோதி ரசித் வாய உடைக்க..ஐயோ வலிக்குதேனு அவர் அழுத்தி வாய்யா துடைக்க.. டிவில்லியர்ஸ் அபிசேக் ஆஹ் ரன் அவுட் ஆகி ஓட விட்டாரு…ஹைதராபாத் அடுத்தடுத்து விக்கெட்களை விட்டு,பெங்களூர் வெற்றிய தொட்டு,கேப்டன் கோலி சந்தோஷத்தில் புன்னைகையை விட்டு 10 ரன் வித்தியாசத்துல இந்த ஐ.பி.ல் முதல் வெற்றிய கிஸ் அடிச்சுச்சு.. ஆட்டத்தையே மாற்றிய சகாலுக்கு ஆட்ட நாயகன் விருது..செம ல
அப்படியே இன்னைக்கு மாட்ச்க்கு வந்தா…அடடே இன்னைக்கு நம்ம ஊரு சென்னைக்கும்,ஆஸ்திரேலியே வீரர் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தானுக்கும் ஒரு மிக பெரிய போட்ட போட்டிங்கோ..ராஜஸ்தான் சைடு பட்லர் சாம்சன்,ஸ்டோக்ஸ் மில்லர்னு நட்சத்திரங்கள் ஜொலிக்க..
சென்னை சைடு தோனி,வாட்சன்,சஹார்,டு பிளிசி,பிராவோனு பட்டைய கிளப்ப ரெடியா இருகாங்க வழக்கம் போல நைட் 7.30 மணிக்கு UAE ல உள்ள சார்ஜா கிரௌண்ட்ல நடக்குதுங்க ..மறக்காம பார்த்துருக்கோங்க …