சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில்,ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் T நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷ்யாம் சுந்தர் ஜே, மருத்துவர் அஞ்சனா வண்ணன், தளவாட மேலாளர் துஷார் கேட்கர் மற்றும் நெட் பந்துவீச்சாளர் பெரியசாமி கணேசன் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், அணியின் மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளதால்,இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.