சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) : ஐ.பி.எல் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா தீடிரென விலகி உள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் விலகி உள்ளதாக சி.எஸ்.கே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சி.எஸ்.கே துணை கேப்டன் ஒரு வாரத்திற்கு முன்பு தனது மற்ற இந்திய அணி வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன் ஐக்கிய அரபு எமிரேட் வந்திருந்தார், ஆனால் இப்போது தனிப்பட்ட காரணங்களால் இந்தியாவுக்கு திரும்பி வருகிறார்.
இதுகுறித்து, சி.எஸ்.கே தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் சி.எஸ்.கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். அவர் இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க மாட்டார். சி.எஸ்.கே அணி சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்திற்கு முழுமையான ஆதரவை தரும்” என்று தெரிவித்துள்ளார்.