சச்சினையும், லாராவையும் அடிச்சிக்க ஆளே கிடையாது…தலைமீ து அடித்து சத்தியம் செய்யும் ஷேன் வார்னே

இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா ஆகியோர்தான் உலகத்திலேயே சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று சுழல்பந்து வீச்சு மன்னனும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் வார்னே தனது ரசிகர்களுடன் பேசும்போது கூறியதாவது:
கடந்த 1989 முதல் 2013 வரையிலான போட்டிகளில் தான் சச்சின், லாரா ஆகியோருடன் இணைந்து மற்றும் எதிராக விளையாடியுள்ளேன்.
நாங்கள் மூவரும் மைதானத்தில் போராடிய அந்த போட்டிகளை காண ரசிகர்களாகிய நீங்கள் விரும்புகிறீர்களா.

உலகத்திலேயே மிகச்சிறந்த பெஸ்ட் வீரர்கள் யார் என்று கேட்டால் நான் சச்சின், லாரா என்றுதான் பதில் சொல்வேன். மற்ற வீரர்கள் பயப்பட்டபோது எனது பந்துவீச்சை அடித்து நொறுக்கியவர்கள் சச்சினும், லாராவும்தான். இதை நான் கூச்சப்படாமல் சொல்வேன். அவர்களுடன் நான் இணைந்து விளையாடிய போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு இப்போதும் விருப்பம் என்று நினைக்கிறேன்” என்றார்.

மேலும் சச்சின், லாலாவுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ஷேன் வார்னே, ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளையும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version