இந்திய அணியின் இளம் கேப்டன் மாரடைப்பால் மரணம்!!

ரஞ்சிப் போட்டிகளில் செளராஷ்ட்டிரா அணிக்காக விளையாடி வந்த இளம் பேட்ஸ்மேன் அவி பரோட் (29) மாரடைப்பால் இன்று காலமானார்.

அவி பரோட்டின் இறப்பை செளராஷ்ட்டிரா கிரிக்கெட் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டில் அவி பரோட் கேப்டனாக இருந்தார். மேலும் 2019-20ஆம் ஆண்டு ரஞ்சித் தொடர்களில் சௌராஷ்ட்ரா அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்த இவர், ஹரியானா மற்றும் குஜராத் அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார்.

இவரது இறப்பு அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கம் துயரத்துடன் தெரிவித்துள்ளது.

Exit mobile version