ஒரு யானையின் அழிவு என்பது ஒரு வனத்தின் அழிவுக்கு சமம்

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனப் பகுதியில் கடந்த வருடம் உடல் நலமில்லாமல் ஒரு யானை கண்டெடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் யானை இறந்து போனது. முதல்கட்ட உடற்கூறு ஆய்வில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. உடலில் எந்த காயமும் இல்லாததால் சாப்பிட்ட உணவு காரணமாக இருக்குமா என்று ஆராயப்படுகிறது.

கடந்த வருடம் கோவையில் மட்டும் மொத்தம் 16 யானைகள் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்டின் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமா என்றும் தோன்றுகிறது. இப்படி இயற்கையாக இறந்து போகும் யானைகளின் எண்ணிக்கையே அதிகமாகிக் கொண்டு இருக்கும் போது, அதற்கு போட்டி போடும் விதமாக செயற்கையாக யானையை கொலை செய்வதும் நடந்து வருகிறது. 


 யானை கொலை என்றவுடன் கேரளாவில் கர்பிணி யானைக்கு  நடந்த கொடுமை தான் நியாபகம் வரும். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உணவு தேடி ஊருக்குள் வந்த கர்பிணி யானைக்கு அன்னாச்சி பழத்தில் வெடி வைத்து சாப்பிட கொடுத்துள்ளனர். அதை கடித்ததும் வாயில் வெடி வெடித்து தசைகள் கிழிந்து தொங்கியது. சாப்பிட்ட அன்னாச்சி பழத்தால் உள் பாகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. பின், யாருக்கும் தீங்கில்லாமல் ஆற்றில் போய் உயிரை விட்ட அந்த யானையை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.     கேரளாவில் வயல்வெளிகளுக்கு உணவு தேடி வரும் யானைகளை விரட்ட வெள்ளக்கட்டியில் சிறிய வகையான வெடி வைத்து துரத்துவார்கள். அந்த சிறிய வெடியால் யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. மேலும், வயல்வெளிகளை சுற்றி போடப்படும் உயர் அழுத்த மின் வேலிகளில் சிக்கி யானைகள் மட்டுமின்றி மற்ற வன விலங்குகளும் இறந்து போகிறது. 


கேளரா விவகாரத்தில் யானை வெடிவைத்து கொள்ளப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயல் என உச்சநீதி மன்றம் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மனிதர்கள் என்றாலும் விலங்குகள் என்றாலும் ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14 மற்றும் 21 ஆகியவை ஒவ்வொரு உயிரும் கண்ணியத்துடன் வாழ வழி செய்கிறது. மேலும் மிருகவதை தடுப்பு சட்டம் 1960யை இன்னும் பலப்படுத்தி, மிருகங்களுக்கு தீங்கு செய்வோருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


யானைகள் காட்டை விட்டு குடியிருப்புகளில் உள்ள  வயலுக்கு உணவை தேடி வர காரணம் காட்டில் அதற்கு தேவையான உணவு கிடைத்தாது தான். வன விலங்குகள் அடந்த காடுகளுக்குள் தான் இருக்கும்.  காடுகள் அழிக்கப்பட்டு மனிதர்கள் குடியேறி வருவதால் காட்டிற்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்து விடுகிறது.  இதனால் தான் மனித குடியிருப்புகளுக்கு விலங்குகள் வருகிறது.


யானைகள் புத்திகூர்மை உள்ள விலங்குகள். ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அந்த பகுதி செழித்து வளர்வதற்கு இயற்கை உரங்களை இடும். காட்டுக்குள் விதைப்பரவல் என்னும் பணியையும் செய்யும். இதனால், இயற்கை சுழற்சி காட்டுக்குள் இயல்பாக இருக்கும். யானைகள் அழிக்கப்படும் போது இந்த சுழற்சி தடைபடும். எனவே, ஒரு யானையின் அழிவு என்பது ஒரு வனத்தின் அழிவுக்கு சமம். 

Exit mobile version