தமிழகத்தல் கொரோனாவால் ஒரே நாளில் 97 பேர் பலி; 5881 பேருக்கு புதிதாக தொற்று

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,83,956 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,778 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வேறு எந்த பாதிப்பும் இல்லாத  8 பேர்  உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை  3,935 – ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,013 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 99,794  ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 120 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 57,968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் இதுவரை 25,60,269 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version