4 மாவட்டங்களுக்கு விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் 187 வெளிநாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு தமிழக கலாசாரப்படி வரவேற்பு அளிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிப்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு பாடல் வெளியானது. வேட்டி, சட்டையில் குதிரை தலையுடன் இருக்கும் உருவம் பொறித்த புகைப்படங்கள் மெட்ரோ ரயிலில் இடம்பெற்றன. மேலும், மாமல்லபுரம் வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Exit mobile version