முதல் நாள் 10-ம் வகுப்பு தேர்வில் 42,024 பேர் ஆப்செண்ட்..!!

Public Exam, 10th Public Exam, Tamil Nadu Public Exam
public exam

நேற்று நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 42 ஆயிரம் பேர் பங்கேற்காமல் இருந்தது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று முன் தினம் பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின. நேற்று முதல் 10-ம் வகுப்பு தேர்வுகள் துவங்கின. பிளஸ் 2 தேர்வின் முதல் நாளில் 8.37 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 33 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேறவில்லை.

அதேபோல நேற்று நடந்த 10-ம் வகுப்பு மொழிப் பாடத் தேர்வை 9.55 லட்சம் எழுத அனுமதி பெற்றிருந்தனர். அவர்களில் 42,024 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த எண்ணிக்கி பள்ளிக் கல்வித்துறையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 5 சதவீதமாகும். மாணவர்கள் தேர்ர்வெழுத அஞ்சுகின்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களை காட்டி அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படவில்லையா என்கிற கோணத்தில் இந்த விவகாரத்தை பள்ளிக் கல்வித்துறை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வுக்கு வராத மாணவர்களின் தகவல்களை திரட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீடுகள் அல்லது அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version