கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள், செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய, யு.ஜி.சி. மறுத்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழங்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இறுதி ஆண்டு தேர்வு கட்டாயம் நடத்தியே ஆகவேண்டும் எனவும், தேர்வு தொடர்பாக முடிவுகளை எடுக்க யு.ஜி.சி.-க்கு தான் முழு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்திருந்தது. இதனால் செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்வை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே தேர்வுக் குறித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியதாவது, இறுதி ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான அனைத்து செமஸ்டர் தேர்வுகளும், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வுக் குறித்ததான அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் அனைவரும் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.