ஆட்டோவில் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கடந்தாண்டு கொண்டு வந்த போக்குவரத்து சட்டத்தில் அதிக கெடுபிடிகளைக் கொண்டு விதிகளை அமல்படுத்தியது.
இதனால் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், அதில்லாமல் சென்றால் குறிப்பிட்ட தொகை அபராதமாகப் போக்குவரத்து போலீஸாரால் வசூலிக்கப்பட்டது.
விபத்துகளைக் குறைக்க மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனால் அந்தந்த மாநிலங்களே இதற்கு அபராதத் தொகையை வசூலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹைல்மெட் அணியவில்லை என போக்குவரத்துக் காவலர் ஒருவர் ரூ. 200 அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.