
இடதுசாரி சிந்தனயாளர்களின் கருத்துச் சுதந்திரம் குறித்து பேசிக்கொண்டிருக்கக்கூடிய இந்த சூழலில், இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளது அவருடைய கருத்துச் சுதந்திரம் இல்லையா என்று குஷ்பு வினவியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி நிறுவிய தினத்தை முன்னிட்டு, சென்னை பட்டிணப்பாக்கத்தில் தூய்மை இந்திய திட்டத் வலியுறுத்தி அக்கட்சி சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் பிரதமர் நரேந்திரா மோடி மற்றும் அம்பேத்கரை ஒப்பிட்டு திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜ கூறிய கருத்து தொடர்பாக கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இடதுசாரிகளின் சிந்தனைகளை வெளிப்படுத்துவது குறித்து நாட்டில் பெரிய விவாதம் நடந்து வருகிறது. ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா வெளிப்படையாக சொன்னதை ஏன் உங்களாக் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இது முழுவதும் இளையராஜா அவர்களின் கருத்து அதை நாங்கள் வரவேற்கிறோம் அவ்வளவுதான் அவர் உண்மைகளை மட்டுதான் பேசியுள்ளார் என்று குஷ்பு தெரிவித்தார்.
