குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த ‘புரெவி’; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் மையம் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறல்; இந்தியா பதிலடி

Exit mobile version