8 மாத கர்ப்பிணி பெண்ணை சாலையில் தரதரவென இழுத்து சென்ற கொடூரன்!

சென்னையில் பட்டப்பகலில் 8 மாத கர்ப்பிணியை சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பல்லாவரத்தின் ரேணுகா நகரை சேர்ந்த கீதா, வீட்டு வாசலிலுள்ள பிள்ளையார் கோயிலில், சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேரில், ஒருவன் மட்டும் இறங்கி வந்து, கீதாவிடம் இருந்து செயினை பறிக்க முயற்சித்தான்.

சுதாரித்துக் கொண்ட கீதா, செயினை விடாமல் போராடிய நிலையில், அவரை கீழே தள்ளிவிட்ட ம.ர்.ம நபர், சாலையில் த.ர.த.ரவென இ.ழு.த்.துச் சென்றான். கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால், செயின் பறிக்கும் முயற்சியை கைவிட்டு, தனது கூட்டாளிகளுடன் அந்த கொடூரன் தப்பி சென்றான்.

இந்த சம்பவத்தின் போது செயின் பறிக்க முயன்றவனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் யாருமே நினைக்கவில்லை. கர்ப்பிணி பெண்ணிடம் ஈவு இரக்கமின்றி நடந்து கொண்ட திருடனை போலிசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version