சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு : சென்னை காவல்துறை

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை நாளை இரவு 10 மணியுடன் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என்றும், சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more – நண்பர் என்ற முறையில் ஆதரவு கேட்பேன் : கமல்ஹாசன் பேச்சு

மேலும் பைக் ரேஸ் மற்றும் விபத்துக்களை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள மேம்பாலங்கள் நாளை இரவு மூடப்படும் என்றும், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version