‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’-துவக்கி வைக்கும் ஸ்டாலின்!!

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டை முதல்வர் வெளியிடுகிறார். பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த உள்ளனர். மேலும், பிளிப்கார்ட் நிறுவனம் மூலம் 2,000 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும், சுமார் ரூ.240 கோடி மதிப்பிலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்த மாநாட்டில் கெயெழுத்தாகவிருக்கிறது.

Exit mobile version