தமிழகத்தில் பள்ளிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவால் இதுவரை 79,90, 322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 72,59,509 பேர் கொரோனாவிலிர்ந்து குணமடந்துள்ளனர். சுமார் 120010 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 71,4,235 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இதுவரை 6,75,518 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 10,983 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 4 வது கட்ட பொது ஊரடங்கு முடியவுள்ள நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி மருத்துவர்கள், வல்லுநர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆலோசனைகள் பள்ளிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காய்ச்சல் முகாம்களை தொடர்ந்ந்து நடத்திய வேண்டுமெனவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல்,கோவிட் சிகிச்சை மையங்களில் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய வேண்டுமெனவும், பண்டிகை காலம் என்பதால் விழிப்புணவு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.