புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஓரிரு நாளில் நிவாரணம் வழங்கப்படும்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, பின்னர் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு 11 மணி வாக்கில் புயல் கரையை கடக்கும் போது கனமழையுடன் சூரைகாற்றும் வீசியது.

சென்னையை புரட்டிப்போட்ட இந்த புயல் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் எனறும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயலால் பெரிய அளவில் சேதம் இல்லை எனவும் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்கள் பிற்பகலுக்குள் தெரிய வரும் எனவும் கூறினார்.

Exit mobile version