டெல்டா பாசனத்திறகாக அதிகாரிக்கப்பட்ட நீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த மாதம் 12-ந் தேதி முதலே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது, பாசனத்தின் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் திறந்துவைக்கப்பட்டது.இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ள காரணமாக அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடியில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக நீர் திறப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பார்த்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஆனது 85.16 அடியிலிருந்து 84.34 அடியாக குறைந்தது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 142 கன அடியிலிருந்து வினாடிக்கு 226 கன அடியாக சற்று அதிகரித்து இருக்கிறது. அணையின் நீர்மட்டமானது தற்போது இருப்பு 46.41டி.எம்.சி ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version