சட்ட விரோத குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு… அபராதம் விதித்திடுக!!


சட்ட விரோத குவாரிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துக்குமார் சட்டவிரோத குவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குவாரிகளை நடத்தி வரும் மீது கனிமவள சட்டம், மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது மட்டும் போதாது அவர்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு உத்தரவிட்டுள்ளனர்.வசூலிக்க வேண்டும் ,பாதிப்பை கணக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர் ..வழக்கு விசாரணை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்..

Exit mobile version