பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்க அரசாணை

பிப்ரவரி 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் தொடங்கலாம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றாக 11 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் 10,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தநிலையில் வருகிற 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்தில் உள்ள கல்லூரிகளிலும் அனைத்து வகுப்புகளையும் 8 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகளை நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Exit mobile version