கொரோனா ஊரடங்கிலும் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவ்வளவு ஏன் மக்களின் பொருளாதாரத்தையும், உடல் நலனையும் பாதிக்க கூடிய மதுபானக்கடைகளைகூட சென்னை தவிர்த்து மற்ற இடங்களில்திறக்கஅனுமதித்துள்ளது

ஆனால் தமிழகமெங்கும் நான்கு மாத காலமாக உடற்பயிற்சி கூடங்கள் திறக்காததால் அதை நடத்துகின்ற உரிமையாளர்கள் வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் சென்னையில் உள்ள இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத அவல நிலை நிலவுகிறது.
தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எப்போதுமே பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டு இருக்கும் உடற்பயிற்சி கூடங்கள் மட்டுமின்றி உடற்பயிற்சி கூடங்கள் நடத்துபவர்களும் தற்போது உற்சாகம் இழந்து விட்டனர் அரசால் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க இன்றுவரை அனுமதி வழங்காததால் பல ஊழியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் உள்ள கந்தன்சாவடி பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தும் திருநாவுக்கரசு இடம் விசாரித்தபோது தற்போதைய நிலையில் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது ஜிம் மூடியிருந்த நிலையிலும் வாடகை மற்றும் மின்சார கட்டணம் போன்றவையே மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது அது இல்லாமல் பேங்க் லோன் வேறு உள்ளது ஏற்கனவே பல ஜிம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு ஜிம் அசோசியேஷன்தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில்
சில காலங்களின் இந்த கொரோனா தாக்கம் முடிந்து நாங்களும் மீண்டும் முழு உத்வேகத்துடன் எங்கள் பணிகளை தொடர்ந்து கடன் சுமை மற்றும் வறுமை இவை அனைத்திலிருந்தும் விடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் எங்களால் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை.
மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சிக்கூடம் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்ட நிலையில் எந்தவிதமான வருமானம் இல்லாமல் எங்களின் வாழ்வாதாரமும் முதலீடும் மிகவும் பாதித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக உடற்பயிற்சி கூடத்தின் வாடகையும் செலுத்த முடியாமல் எங்கள் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் மிகவும் துயரத்துடன் நாங்கள் இன்று துன்ப வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஊரடங்கு காலகட்டத்தில் சில அமைப்புகளும், நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுடன் செயல்படத் தொடங்கின. அதனால் வாடகை தளத்தில் இயங்கும் எங்களின் உடற்பயிற்சி கூடங்களின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொடர்ந்து எங்களுக்கு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நிறந்தரமாக மூடும் சூழ்நிலையும் நிலவுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது போன்ற அபாய சூழ்நிலை நிலவுவதால் நாங்கள் மிகுந்த மன வேதனைகளுக்கு உள்ளாகியுள்ளோம். ஐயா எங்களுக்கு நிவாரணமோ உதவித் தொகையோ தங்களிடம் நாங்கள் கோரவில்லை. ஆனால்
ஐயா எங்கள் சுமையை குறைப்பதற்கு வணிக கட்டிட உரிமையாளர்களிடம் அவர்கள் வாடகை கேட்டு எங்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கும்படியும், வாடகைகளை குறைத்துக் கொள்ளும்படியும் வணிக கட்டிட உரிமையாளர்களுக்கு ஒரு ஆணை பிறப்பித்தால் தங்களின் தாயுள்ளம் கொண்ட அரசுக்கு நாங்கள் என்றுமே நன்றி உள்ளவர்களாக இருப்போம். இந்த ஒரு நிகழ்வு நடந்தால் உடற்பயிற்சி நிலையங்கள் மறுபிறவி எடுத்து முன்னேறி செல்லும்.
தங்களது அம்மா அரசின் ஆணை எங்களுக்கு கருணை அளிக்கும் என்று தமிழ்நாடு உடற்பயிற்சி கூடம் உரிமையளர்கள் சங்கம் மகிழ்ச்சிடன் காத்திருக்கிறோம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இதற்கிடையில் மத்திய அரசு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறந்து கொள்ளலாம் என்று அறிவித்தும் சற்று நிம்மதி அடைந்த நிலையில் ஆனால் தமிழக அரசு அதற்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டது அவர்களை அதீத சோகத்தில் ஆழ்த்தியது .