
இரண்டாவது கணவர் மூலம் மீண்டும் கர்ப்பம் அடைந்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோலப்பட்டியைச் சேர்ந்தவர் உமாதேவி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய முதல் திருமணம் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
எனினும் முதல் திருமணம் விவகாரத்தான நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் உமாதேவி. தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை குழந்தை பெற்று, பேறுகால விடுப்பு எடுத்துவிட்டதால், மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி பார்த்திபன், உமாதேவி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழ்ங்கினார். அதன்படி, மகப்பேறு பலன்களைப் பெறுவதற்காக குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத வரை, வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைக்கு எந்த தடையையும் விதிக்க முடியாது. அதனால் மனுதாரருக்கு பேறுகால விடுப்பு வழங்க உத்தரவிட்டார்.
