திருமலை நாயக்கர் அரண்மனையில் நிரந்தரமாக போட்டோஷூட் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ்பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு காணப்படும் தூண்கள் வரலாற்று சிறப்புமிக்கவை. மொத்தம் 248 தூண்கள் உள்ளன். (தூண்களின் உயரம் 82 அடி, அகலம் 19 அடி).
இந்த அரண்மனை 1971ம் ஆண்டு தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இதை இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2011ம் ஆண்டு முதல் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், குறும்படங்கள், விளம்பரங்கள் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோஷூட்கள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நிரந்தரமாக போட்டோஷூட் எடுக்க மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மனையை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.
