அரசுப்பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விரைவுபேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களை தவிர்த்து மற்ற பயணிகள் அனைவருக்கும் காகித பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சர்வதேச ஒப்பந்தபுள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தானியங்கி பயணச்சீட்டு முறையை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், தானியங்கி முறையில் தேசிய பொதுப்பயண அட்டை, கியூஆர்கோடு ஆகியவை மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
