பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.
சென்னை தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையின் 383வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நேற்றுமுதல் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை தீவுத்திடலில் மிதிவண்டிகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய மிதிவண்டிகள் முதல் 90களின் காலக்கட்டங்களில் இருந்த மிதிவண்டிகள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை சுற்றுலாத்துறை செயலர் சந்திர மோகன் மற்றும் இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அம்மன் கோயில்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அழைத்துச் செல்லப்படும். அப்போது வழிகாட்டி (கைடு) ஒருவரும் உடன்வரும் வகையில் ஏற்பாடும் செய்யப்படும் என தெரிவித்தார்.