திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பச்சை சாத்தி மண்டபத்தில் வெள்ளைநிற பட்டு அணிந்து சுவாமி எழுந்தருளினார்.  அங்கு அவருக்கு தீபாராதனை நடந்தது. ஆவணி திருவிழாவின் 10ம் நாளான நாளை (26.08.2022) காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version