வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ’ஜெண்டில்மேன்’ படத்தை 10 முறை பார்த்தேன்… குற்றவாளி வாக்குமூலம்

அரும்பாக்கம் தனியார் வங்கிக் கொள்ளையில் சிக்கிய முக்கிய குற்றவாளி, தான் கோடீஸ்வரனாக வேண்டும் என்பதற்காகவே கொள்ளையடித்தேன் என்றும் அதற்காக ஜெண்டிமேன் படத்தை 10 தடவை பார்த்தேன் என்றும்  வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் 31.7கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். போலீசார் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டதில், அதே வங்கியில் பண்புரிந்த மண்டல மேலாளர் முருகன் (29), கூட்டாளிகள் சந்தோஷ் (30), பாலாஜி (28), செந்தில்குமரன் (38), ஸ்ரீவத்சன், சூரியபிரகாஷ் (29), மற்றும் அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த கேப்ரியல் ஆகியோரை கைது செய்தனர். கொள்ளைப்போன 31.7 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான முருகன், சூர்யா, செல்வகுமரன் ஆகிய 3 பேரை ஒரு நாள் காவலில் போலீசார் விசாரித்தனர்.

அப்போது முருகன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது: சென்னை பாடிகுப்பம் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்திக்கொண்டே அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்தேன். ஒரு கட்டத்தில்  உடற்பயிற்சி கூடத்தை நடத்த பணம் இல்லாமல் அதை மூடிவிட்டேன். பின்னர், உழைத்தால் கோடீஸ்வரனாக முடியாது. குறுக்கு வழியில்தான் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக, வங்கியில் எப்படி கொள்ளையடிப்பது என்பதை அறிய ஜெண்டில்மேன் படத்தை 10 முறை படம் பார்த்தேன். அதன்பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மாதம் திட்டம் தீட்டினேன். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி பணம்பெற்ற பிறகு ஒருவருக்கு தலா ₹50 லட்சம் கொடுப்பதாக பேசினேன். பின்னர், கூட்டாளிகளுக்கு 2 கார் 3 பைக்குகள் கொடுத்து வங்கியில் கொள்ளையடிப்பதற்கு துணியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

Exit mobile version