கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி… ஆனால் நிறைய கண்டிசன்ஸ்

கோயில்களில் ஆடல், பாடலுடன் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்துள்ள நிபந்தனைகள்:

*நிகழ்ச்சியில் அரசியல் கட்சியின் பிளக்ஸ் போர்டுகள் இருக்கக் கூடாது. சாதிய ரீதியான வன்மங்கள் இருக்கக் கூடாது.

*நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் குட்கா பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

*மதுபானங்களை உட்கொள்ளக் கூடாது

*போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

*ஆடல், பாடல் நிகழ்ச்சி இரவு 7மணி முதல் 10மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.

இவ்வாறு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

Exit mobile version