
வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ. 50 அதிகரித்து ரூ. 1015 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பிப்ரவரியில் ஒரு சிலிண்டர் ரூ. 917 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 50 உயர்த்தப்பட்டு சிலிண்டர் விலை ரூ. 967-ஆக உயர்ந்தது.
எனினும் கடந்தாண்டில் ஒரு சிலிண்டர் விலை ரூ. 965-க்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும் இந்த மாதம் மேலும் ரூ. 50 உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டர் ரூ. 1015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வீட்டு பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருவது பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.
