காதலியை ஆணாக மாற்றிவிட்டு கைவிட்டுச் சென்ற பெண்..!!

madurai thirunambi

அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஆணாக மாறிய தோழியை திருமணம் செய்துகொண்ட பெண், பிரிந்து சென்றுவிட்டதால் பாதிக்கப்பட்ட திருநம்பி ஆதரவின்றி தெருவில் சுற்றி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசுதா மற்றும் செந்திலா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் செந்திலா ஊர்காவல் படையில் பணியாற்றி வருகிறார். திருமண ஏற்பாடுகள் நடந்ததை அடுத்து, செந்திலா தனது காதலி ஜெயசுதாவை ஆணாக மாறுவதற்கு கட்டாயப்படுத்தியுள்ளார்.

காதலியின் பேச்சை நம்பிய ஜெயசுதாவும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மார்பகங்களை அகற்றிவிட்டு அறுவை சிகிச்சை மூலம் திரும்பியாக மாறிவிட்டார். மேலும் குரல் மாறுவதற்கு அவர் ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டும் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஜெயசுதா மற்றும் செந்திலா இருவரும் திருமணம் செய்துகொண்டு திருப்பரங்குன்றத்தில் வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதுகுறித்து செந்திலாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு வந்து செந்திலாவை தங்களுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்நிலையத்தில் ஜெயசுதாவுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு செந்திலா பெற்றோருடன் சென்றுவிட்டார். இதனால் தற்போது தன்னுடைய உறுப்புகளை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கிறார் ஜெயசுதா.

அவருடைய பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கையில் பணமும் இல்லை. தெரிந்தவர்கள் யாரும் ஆதரவு தரவில்லை என்பதால், மிகவும் பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து காதலியிடம் பேச முயற்சித்து வருவதாக ஜெயசுதா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version