4-வது நாளாக சாரல் மழையிலும் சுடர் விட்டு எரியும் திருவண்ணாமலை மகாதீபம்…!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 6-ந் தேதி மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது.

மகா தீபத்தை காண வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் 4-ம் நாளான இன்றும் மலை உச்சியில் மகா தீபம் சுடர் விட்டு எரிந்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக மாவட்டத்தில் பெய்து வரும் மழையிலும் மகா தீபம் எரிந்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு களித்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version