மெட்ரோ விபத்து ரூ.25 லட்சம் இழப்பீடு

மெட்ரோ பணிக்கான உபகரணம் விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பணியின்போது இரண்டு ஐ-கிர்டர்கள் இடிந்து விழுந்ததில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரமேஷ் உயிரிழந்தார். நேற்று இரவு நடந்த இத்துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரமேஷின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கியுள்ளது. மெட்ரோ கட்டுமானப் பணியின் ஒப்பந்த்தாரரான எல்&டி நிறுவனம் ₹20 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. இந்த விபத்துக் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது.

Exit mobile version