மதபிரச்னையை தூண்டினால் கடும் நடவடிக்கை; சட்ட அமைச்சர் காட்டம்

மத பிரச்சினையை தூண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனல் ஒன்றில், முருகன் பற்றியும், கந்த சஷ்டி கவசம் குறித்தும் அவதூறாக வீடியோ வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்கள் எதிரொலியாக சமூக வலைதளங்களில் காரசாரமான, மத துவேஷ கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் விதமாக கார்ட்டூன் வெளியிட போவதாக சமூக விரோத கும்பல் ஒன்று அறிவித்தது. இதையடுத்து, ஓவியர் வர்மா என்கிற சுரேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் இது குறித்து சட்டத்துறை பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் மத ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதை ஏற்க முடியாது.

மதரீதியான கலவரங்களை தூண்டும் வகையில் யாராக செயல்பட்டால் அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Exit mobile version