அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
NEET Coaching

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 2020 நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதல் 2021-ஆம் ஆண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இதில் இலவசமாகக் கலந்துக்கொள்ளலாம்.

கடந்த ஆண்டு பயிற்சி அளித்த இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் அதிக அளவிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டும் (2020-21) இ-பாக்ஸ் நிறுவனம் மூலமே இலவச நீட் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

நீட் பயிற்சியில் அதிக அளவிலான மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர் வாயிலாக மாணவர்களின் விவரங்களைத் திரட்டுவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version