தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

trichy dead
palani Family Death

தண்ணீர் வாளிக்குள் விழுந்த சோப்பை எடுப்பதற்காக குனிந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டையிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய ஒரு வயது குழந்தை ஹரீஷ் தண்ணீர் நிறைந்த வாளிக்குள் விழுந்த சோப்பை எடுக்க முயன்றுள்ளான்.

அப்போது தவறி அந்த வாளிக்குல் தலைகீழாக குழந்தை விழுந்துவிட்டான். மயக்க நிலையில் கிடந்த குழந்தையை மீட்ட பெற்றோர், துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தை ஹரீஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அதையடுத்து பெற்றோர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்திற்கு எடுத்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version