தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது- முழு விபரம் இதோ..!!

property tax
property tax

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்களுக்கான சொத்து வரி 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு இணங்க உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வீதத்தை மாற்றிக் கொள்ளலாம் அன மத்திய அரசின் 15-வது நிதி ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக சொத்து வரி சீராய்வை மேற்கொள்ள உதவுவதற்கு தனியாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி 600 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1200 வரையிலா சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள் இனி 50 சதவீதம் சொத்து வரி செலுத்த வேண்டும்.

மேலும் 1201 முதல் 1800 வரையிலான சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடங்கள் 100 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதம் வரையும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சொத்து வரி குறைவு தான். சொத்து வரி உயர்த்தப்பட்ட போதிலும் இந்த வரி உயர்வு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையிலும் தான் சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version