மகன் கண்முன்னே சாலை விபத்தில் உயிரிழந்த தாய்..!!

maharashtra man
salem andhiyur

மாடு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பெண் மகன் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த பாலகுமார் தனது தாய் தனபாக்கியத்தை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் அந்தியூருக்கு சென்றுள்ளனர். அவர்களுடைய வாகனம் அந்தியூர் – பர்கூர் சாலையில் வந்த போது செல்லம்பாளையம் அருகே சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்துள்ளது.

இதனால் சட்டென பிரேக் போட்ட போது இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. இதனால் கீழே விழுந்த தனபாக்கியம் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பாலகுமார் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள அந்தியூர் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், விசாரணை நடத்தி வருகிறார். மேலும் உயிரிழந்த தனபாக்கியத்தின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Exit mobile version