சசிகலா மீது தனிப்பட்ட முறையில் அன்பும் அபிமானமும் உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சொன்னதற்கு சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்துள்ளார். சென்னைக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய சசிகலா, தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தொண்டர்கள் பலர் கோயில்களில் வேண்டுதல் வைத்திருந்தனர். அதற்கான தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வந்தேன்.
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமில்லை. மக்களின் அச்சத்தை களையவேண்டும் என்று முன்னாள் முதல் ஓ.பி.எஸ் கூறியது கடவுளுக்கு தெரிந்த உண்மை. அது தற்போது மக்களுக்கும் தெரிந்துள்ளது. உண்மையை யாரும் மாற்ற முடியாது, திரையிட்டு மறைக்க முடியாது.
அ.தி.மு.க தலைமையில் இருந்து எந்தவிதமான பதிலும் வராததில் கவலை கிடையாது. ஜெயலலிதா தனியாக இருந்து தான் ஆட்சியை பிடித்தார். அந்த அனுபவம் இருப்பதால், இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அ.தி.மு.க கட்சிக்கு தொண்டர்கள் தான் ஆணி வேர்.
சசிகலா மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் அபிமானம் உண்டு என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் கூறியிருந்தார். அவர் உண்மையை தான் சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரிய விஷயம் தான். ஆனால் அவருடைய மரணத்துக்கு நான் காரணம் என்று கூறுவது அரசியலில் என்னை பிடிக்காதவர்கள் செய்யும் பொய் பிரச்சாரம் என்று சசிகலா பேசினார்.