
மத்திய பண்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு தகவலில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியலில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
உலகளவில் இருக்கும் பாரம்பரியம் கொண்ட, பண்பாட்டு அடையாளங்கள் நிறைந்த இடங்களை கண்டறிந்து, அதை யுனெஸ்கோ அமைப்பு அடையாளப்படுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவில் பண்பாட்டு அமைச்சகம் நாட்டின் பாரம்பரியமிக்க இடங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சித்து வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத், இதுதொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள அமைச்சகம், , ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில், அமிர்தசரஸ் கோவில் இரண்டும், ஏற்கனவே யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
கலாச்சார அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கறிஞர் ஜெகன்நாத் தமிழகத்திலுள்ள சில பழமையான கோயில்களையும் குறிப்பிட்டு அனுப்பி இருந்தார். அதன்படி, வழக்கறிஞர் ஜெகன்நாத் குறிப்பிட்ட இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என பண்பாட்டு அமைச்சகம் அவருக்கு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளது.
