நேபாள பேரழிவு குறித்து பஞ்சாங்கத்தில் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது — நடிகை நளினி பேட்டி

காஞ்சிபுரத்தில் ‘ஸ்ரிஷ்டி’ ஆன்மீகப் பொருட்கள் விற்பனை நிலைய திறப்பு விழாவில் திருமதி நளினி பங்கேற்பு

காஞ்சிபுரம்: நேபாளத்தில் நிகழ்ந்த பேரழிவு குறித்து பஞ்சாங்கத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்ததாக நடிகை நளினி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பஞ்சாங்கத்தைப் படித்திருந்தால் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு ராஜ வீதியில், சங்கர மடத்திற்கு எதிரே ‘ஸ்ரிஷ்டி தெய்வீக எம்போரியம்’ என்ற ஆன்மீகப் பொருட்களுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையம் புதிதாகத் தொடங்கப்பட்டது.

இதன் திறப்பு விழாவில் பழம்பெரும் நடிகை நளினி கலந்து கொண்டு புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்த விற்பனை நிலையத்தில் பாரம்பரிய ஆன்மீகப் பொருட்கள், சுவாமி சிலைகள் மற்றும் கொலுவுக்குத் தேவையான பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருநாளாவது பஞ்சாங்கத்தைப் படிக்க வேண்டும்

திறப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நளினி, நேபாளத்தில் நிகழ்ந்த பேரழிவு குறித்து கருத்துத் தெரிவித்தார். அப்போது, “நேபாள நாட்டில் பேரழிவு நடைபெற இருப்பதாக பஞ்சாங்கத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்திருந்தால் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம். ஆகையால் அனைவரும் ஒருநாளாவது பஞ்சாங்கத்தைப் படித்தால் நல்லது” என்று அவர் தெரிவித்தார்.

திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆன்மிக பேச்சாளர் யு.வி.துஷ்யந்த் ஸ்ரீதர், வி.ஜி.பி. சந்தோசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் புகைப்படங்கள் சில….

Exit mobile version