சேலம்-சென்னை இடையே முழு அளவிலான விமான சேவை.. மீண்டும் தொடக்கம்

சேலம் – சென்னை இடையிலான விமான போக்குவரத்து சேவை, மீண்டும் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் சேலம்- சென்னை வழித்தடத்தில் ட்ரூஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி சேவையாக குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட்டு வந்த விமானம், நிர்வாக காரணங்களுக்காக கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும் சேவை நிறுத்தப்பட்டது. மற்ற பிற 5 நாட்களில் இந்த சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் விமான சேவை மீண்டும் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக ட்ரூஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் காலை 7.15 மணிக்கு விமானம் புறப்பட்டு 8.15மணிக்கு சேலம் வந்து சேரும். பின்னர் சேலத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு 9.35 மணிக்கு சென்னை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version