கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்காக அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்தார் அப்போது கலெக்டர் மாஸ்க் எங்கே என்று கேட்டதும் தான் கட்டியிருந்த வேட்டியை மாஸ்க் போல முகத்தில் வைத்துள்ள வீடியோ தற்போது சமூக தளத்தில் வைரலாகிறது.
தமிழக அரசு தற்போது நிலவும் ஊரடங்கு கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி விழா எளிமையான முறையில் நடைபெறும் என்றும் ஆகஸ்டு 1ஆம் தேதி இந்து முன்னணி கட்சி அறிவித்திருந்தது இதன் பிறகு தமிழக அரசும் விநாயகர் சதுர்த்தியை எளிமையாகவே நடத்த வேண்டும் என்றும் ஊர்வலங்கள் எல்லாம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது இந்த நிலையில் திடீரென்று விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மாண்ட பாணியில் நடத்தவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி கட்சிகள் போராட்டங்களை தொடங்கி வந்தன இதில் இணையத்தில் கருத்து மோதல்களும் நடந்து வந்து கொண்டுள்ளன.
இதில் எச் ராஜா நாங்கள் விநாயகர் சிலையை பொது இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடத்திய தீருவோம் என்று சவால் விட்டுள்ளார் .இந்நிலையில் கோயம்புத்தூர் விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி நிர்வாகி கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளார் அவசரமாக வெளியே சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தி நாங்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவோம் அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும் என்று கொண்டு வந்திருந்த மனுவை நீட்டினார் அதை வாங்கிய கலெக்டர் அவரை நோக்கி உங்க மாஸ்க் எங்கே என்று கேட்டதும் பதறிய அவர் தான் அணிந்திருந்த காவி வேட்டியை தூக்கி பிடித்து முகத்தை மூடி மறைக்கப் பார்த்தார்.
அவரை அதட்டிய கலெக்டர் ராசாமணி “அவனவன் கொரோனாவுல செத்துக்கிட்டு இருக்கான் … மாஸ்க் கூட போடாம மனு தூக்கிட்டு வந்துட்டீங்க என்றார் “
இதைக் கேட்டு மனு கொடுக்க வந்தவர் தலைதெறிக்க ஓடினார் பின்னர் அவர் கடைக்கு சென்று புது மாஸ்க் வாங்கிக் கொண்டு மீண்டும் வந்து மனுவை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு இடத்தை காலி செய்தார் .
