மதுபோதையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள்- அரசுப் பள்ளிய்ல் தொடரும் அவலம்..!!

villupuram students violence at a government school near dindivanam
villupuram students violence at a government school near dindivanam

அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் சக மாணவர்களை துடைப்பதால் தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆனால் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியரை தாக்குவதும், போதை மற்றும் மதுவை உட்கொண்டு பள்ளிக்கு வருவதும், ஆசிரியர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்துவதும் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் அரசுப் பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை துடைப்பத்தால் தாக்கி துன்புறுத்துவதும், தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதுமான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திண்டிவனம் அடுத்துவுள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவலில், இந்த பள்ளியில் அவ்வப்போது மாணவர்களிடையே பிரச்னை ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதனால் பள்ளியில் மின்விசிறி மற்றும் சுவிட்ச்போர்டு போன்ற சொத்துக்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும் பள்ளியில் வருகைப் பதிவேடு கொடுத்தவுடன், மாணவர்கள் பள்ளியின் பின்பக்க மதில் சுவர் எகிறி குதித்து முட்புதருக்குள் மது அருந்துவதும் கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஒருவேளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் கண்டித்தாலும், மாணவர்கள் வெளியாட்களை அழைத்து வந்து மிரட்டல்கள் விடுவதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனால் ஆசிரியர் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளது. உடனடியாக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version