குறைந்த விலையில் ஆப்பிளின் ஏர்பாட்ஸ்!

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் லைட் ப்ரோ தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் ப்ரோவை அறிமுகப்படுத்தியது. இதன் குறைந்த விலை கொண்ட மாடலை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு மேல் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் விலை முந்தைய ஏர்பாட்ஸ் விலையை விட 20 சதவீதம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த புதிய ஏர்பாட் லைட் ப்ரோவில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி இருக்காது எனவும் சொல்லப்படுகிறது.

READ MORE- சோனி ப்ளே ஸ்டேஷன்5 விற்பனை எப்போது?

இதன் தோற்றம் முந்தைய ஏர்பாட்ஸ் போலவே இருக்கும் எனவும் தெரிகிறது. கடந்த ஆண்டு வெளியான ஏர்பாட்ஸ்ஸின் விலை ரூ. 24,900க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version