வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வொர்க் ஃப்ரம் ஹோம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் டேட்டா பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில் பல நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகை திட்டங்களை அறிவித்தன.

அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடியாக வாடிக்கையாளர்களுக்கு புதிய வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகையை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த புதிய சலுகையானது, ரூ. 251 க்கு வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் 28 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

READ MORE- சாம்சங்கின் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்ஃபோன் விவரங்கள்!

இதற்கு முன்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 56க்கு 10 ஜிபி டேட்டாவும், ரூ. 151க்கு 40 ஜிபி டேட்டாவும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் போலவே, ஜியோ மற்றும் ஏர்டெல் போன்றவையும் வாடிக்கையாளர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகையை வழங்கியுள்ளன.

இவற்றின் விலை ரூ. 151ல் இருந்து ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version