ட்விட்டர் நிறுவனத்தை விரைவில் கையகப்படுத்துகிறார் எலான் மஸ்க்..!!

Elon musk
Elon Musk

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூகவலைதளங்களில் முன்னோடி நிறுவனமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்துகிறார். இதை ட்விட்டரின் நிர்வாகக் குழுவும் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் எலான் மஸ்க், ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதன்மூலம், அவர் விரைவில் ட்விட்டர் இயக்குநர் குழுவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தையே அவர் சொந்தமாக வாங்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் கடந்த 25-ம் தேதி இரவு, எலான் மஸ்க் மற்றும் ட்விட்டருக்கு இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

அதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4200 கோடி) முழுமையாக எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதனால் பங்குச சந்தைகளில் ட்விட்டரின் விலை ரூ. 3 லட்சம் கோடி வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version