பாஜி கேமுக்கான முன்பதிவு தொடங்கியது!

பப்ஜி கேம் மீதான தடைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட பாஜி கேம்மிற்கான முன்பதிவு இந்தியாவில் தற்போது தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் உள்ளிட்ட பல செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

தகவல் திருட்டு, ப்ரைவசி உள்ளிட்ட பல காரணங்கள் இந்த தடைக்கு முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து கிட்டத்தட்ட பப்ஜியை பிரதியெடுப்பது போலவே, பாஜி என புது கேமை இந்தியாவை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

தற்போது இந்த பாஜி கேமிற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறுவது போல இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

READ ALSO- எக்ஸ்-ரே மூலம் கொரோனா கண்டறியும் வசதி. எப்படி இயங்குகிறது?

முன்பதிவு விவரங்கள், கதைக்களம் மற்றும் கேம் பிளே போன்றவை இதில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version