இன்ஸ்டாவில் அறிமுகமாகும் லைவ் ரூம் பயன்பாடு. சிறப்பம்சம் என்ன?

இந்தியாவில் லைவ் ரூம்கள் வசதியை அறிமுகப்படுத்துவதாக இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாவின் லைவ் செஷன்களில் இருவருக்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.

சமூக வலைதளங்களில் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கிறது இன்ஸ்டாகிராம்.

இதில் தற்போது இந்தியாவில் லைவ் ரூம்கள் வசதியை அறிமுகப்படுத்துவதாக இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாவின் லைவ் செஷன்களில் இருவருக்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.

READ ALSO- வாட்ஸப் வெளியிட்டிருக்கும் அசத்தல் அப்டேட்!

இது இன்ஸ்டாவின் கேமராவுக்கு அருகிலேயே இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கும். கடந்த மார்ச் மாதத்தில் அதாவது லாக்டவுண் ஆரம்பித்ததில் இருந்தே சோஷியல் மீடியாவில் மக்களின் பயன்பாடு குறிப்பாக இன்ஸ்டாவில் அதிக அளவிலான இளைஞர்கள் பயன்படுத்துவதும், லைவ் வியூஸ் அதிகமாகி இருப்பதையும் இன்ஸ்டா அறிவித்துள்ளது.

இதனையடுத்து ரீல்ஸ் ஆப்ஷனை தொடர்ந்து விரைவில் இந்தியாவில் லைவ் ரூம்ஸ்ஸூம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது.

Exit mobile version